விதிமீறி நிறுத்தி இருந்த கார்களுக்கு பூட்டு போட்ட போலீசார்

விதிமீறி நிறுத்தி இருந்த கார்களுக்கு பூட்டு போட்ட போலீசார்

கலெக்டர் அலுவலகத்தில் விதிமீறி நிறுத்தி இருந்த கார்களுக்கு பூட்டு போட்ட போலீசார்

கலெக்டர் அலுவலகத்தில் விதிமீறி நிறுத்தி இருந்த கார்களுக்கு பூட்டு போட்ட போலீசார்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை, பத்திரபதிவு அலுவலகம், மாற்றுத்திறனாளி அலுவலகம், இ சேவை மையம், உள்ளிட்ட 54க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விதிமுறைகளை மீறி வாகனங்களை அதிக அளவில் நிறுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு அலுவலகம் வந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது. மேலும் அரசு அதிகாரிகள் வாகனம் மற்றும் பிற வாகனங்கள் வருவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சேலம் தெற்கு உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகலா போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களுக்கு போக்குவரத்து துறை காவலர்கள் பூட்டு போட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களிடம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது. அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என எச்சரித்தனர். இதனை மீறி வாகனத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டு வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story