தி. மலையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு: பலூன் பறக்கவிட்ட ஆட்சியர்
பலூன் பறக்கவிட்டஆட்சியர்
திருவண்ணாமலையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பலூன் பறக்க விடப்பட்டது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இந்தியன் வங்கி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய இராட்ச பலூனை பறக்கவிட்டனர்.
மேலும் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட விளம்பர சிற்றேடுகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் ஒட்டியும், தேர்தல் விழிப்புணர்வு வாக்காளர் கையேட்டினை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கியும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story