பிரதமர் காணொளி காட்சி வாயிலாக இயற்கைஎரிவாயு குழாய் அடிக்கல் நாட்டினார்

கொங்கணாபுரம் அருகே பிரதமர் காணொளி காட்சி வாயிலாக இயற்கை எரிவாயு குழாய் அடிக்கல் நாட்டினார்
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள வெட்டுக்காடு பகுதியில் கெயில் நிறுவனத்தின் சார்பில் 294 கிலோமீட்டர் தூரத்திற்கு 2,187 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூர் வரை 9 மாவட்டங்கள் வழியாக இயற்கை எரிவாயு குழாய் வழித் திட்டத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் 294 கிலோமீட்டர் தூரத்திற்கு 2,187 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கெயில் நிறுவனத்தின் சார்பில் இயற்கை எரிவாயு குழாய்வழியே கொண்டு செல்லும் திட்டத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் அருகேயுள்ள வெட்டுக்காடு பகுதியில் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு இயற்கை எரிவாயு பங்கை 6.7 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.... கிருஷ்ணகிரி முதல் கோவை வரையிலான குழாய் தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் வழியாகச் சென்று தமிழகத்தின் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணையுவதன் மூலம் உரம் மற்றும் பெட்ரோல் கெமிக்கல் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் இந்த வழித்தடத்தில் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான சி.என்.ஜி. மற்றும் குடியிருப்புகளுக்கான இயற்கை எரிவாயு வழங்கப்படும். இதன் மூலம் கரியமில வாயுவைக் குறைப்பதற்கும்,இயற்கை எரிவாயுக்குத் தடையின்றி கிடைக்கவும் பங்களிக்கும் இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணியில் 6.5 லட்சம் பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கெயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் மோவர் கூறினார்.. இந்நிகழ்வில் கெயில் நிறுவனத்தின் ஊழியர்கள் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story