வீரபாண்டியில் செல்போன் பறித்தவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி
காவல் நிலையம்
திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ் குமார் (27). பனியன் கம்பெனியில் பணிபுரியும் இவர் நேற்று வித்தியாலயம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் புவனேஷ் குமாரிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
புவனேஷ் குமார் கூச்சலிடவே மர்ம நபரை துரத்திச் சென்ற பொதுமக்கள் வீரபாண்டி பிரிவு சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து வீரபாண்டி போலிசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ( 24) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்குதலில் காயம்பட்ட அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.