மக்களுடன் முதல்வர் மனுக்களை கொடுக்க குவிந்த பொதுமக்கள்

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களது தனிப் பட்ட பிரச்சனை களுக்காக கோரிக்கைகளுக்காக அரசு அலுவலர்களை நாடிச் செல்லும் நிலையை மாற்றி மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பொது மக்களை பகுதி பகுதியாக பிரித்து தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களைப் பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண மக்களுடன் முதல்வர் என்ற முகாம் நடந்து வருகிறது.இதன் படி கடந்த 18ஆம் தேதி திருச்செங் கோட்டில் உள்ள நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த 33 வார்டுகளில் முதல் கட்டமாக ஒன்று முதல் ஏழு வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட முகாம் இன்று நடைபெற்றது 11 முதல் 16 வரையிலான வார்டுகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள 25 மற்றும் 26 வது வார்டுகள் என எட்டு வார்டுகளுக்கான மக்களிடம் முதல்வர் திட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி முகாமை தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். முகாமுக்கு வந்தவர்களை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மாநில திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் மரக்கன்றுகளை கொடுத்து வரவேற்றனர்.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில்மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு நகராட்சி ஆணையாளர் சேகர் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் மேலாளர் குமரேசன் நகர் மன்ற துணைத் தலைவரும் 12-வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான கார்த்திகேயன் திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதிக தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாக உள்ள 13, 14, 15 16 25 26 ஆகிய வார்டுகளில் இருந்து தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். 13வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சினேகா ஹரிகரன் தங்களது வார்டு பகுதியில் பட்டா கேட்டு விண்ணப்பித்த வர்களின் மனுக்களை ஒருங்கே பெற்று வந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மூலமாக வழங்கினார் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால் முதலில் மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கான ஒப்புகை சீட்டுகள் படிப்படியாக வழங்கப்பட்டது. 14 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டனர். மின் இணைப்பு பெயர் மாற்றம்உள்ளிட்ட பல மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட உத்தரவு நகல்களை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில்திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார். முகாமில் பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் பதினோராவது வார்டு மனோன்மணி சரவண முருகன், பன்னிரண்டாவது வார்டு நகர் மன்ற துணைத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான கார்த்திகேயன், 13 வது வார்டு சினேகாஹரிகரன், 14 வது வார்டு டி கே ஜி ராஜா, பதினைந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினரும் நகர் மன்ற தலைவருமான நளினி சுரேஷ் பாபு, 16 வது வார்டு மைதிலி காந்தி, 25 வது வார்டு புவனேஸ்வரி உலகநாதன், 26 வது வார்டு ராதா சேகர் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story