தெருவில் அலையும் கால்நடைகள் - பொதுமக்கள் கோரிக்கை

தெருவில் அலையும் கால்நடைகள் - பொதுமக்கள் கோரிக்கை

முதியவரை முட்டிய மாடு

திருப்பத்தூர் அடுத்த லட்சுமி நகர் பகுதியில் முதியவரை முட்டி கீழே தள்ளிய மாட்டை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்
திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள் பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளிட்டவையை அவிழ்த்து விட்டுவதன் காரணமாக முக்கிய சாலைகளிலின் நடுவே நின்று கொண்டும் படுத்து கொண்டும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அவிழ்த்து விட்ட மாட்டால் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி என்பவரை மாடு முட்டி அருகே உள்ள கால்வாயில் தள்ளி உள்ளது இதேபோல் இந்த மாடு பலமுறை பல பேரை முட்டி உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த மாட்டை அப்பகுதி மக்கள் அருகே உள்ள கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகம் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாடுகளை பிடித்துச் சென்று உரிமையாளர்கள் மீது அபராதம் செலுத்த வேண்டும் என திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த நளினி கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story