பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பாம்பு பிடி வீரர்.

பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பாம்பு பிடி வீரர்.

பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பாம்பு பிடி வீரர்

பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பாம்பு பிடி வீரர்.
கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம் கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது.இந்த தொழிற்சாலையிலே வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.தொழிலாளி ஒருவர் இருக்கையில் அமர்ந்து இருந்த பொழுது காலுக்கு அடியில் பாம்பு ஒன்று புகுந்து சென்றதை கண்டு பதற்றம் அடைந்த தொழிலாளி அதிர்ச்சியில் திகைத்து நின்றுள்ளார். இதுகுறித்து பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீனுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர் அறைக்குள் நுழைந்து இருப்பது அதிக விஷம் உடைய கண்ணாடி விரியன் பாம்பு என்பதும் ஐந்து அடி நீளம் கொண்டது என்பது தெரியவந்துள்ளது.நீண்ட போரட்டத்திற்கு பின் பாம்பை பத்திரமாக பிடித்த ஸ்னேக் அமீன் அதை வனத்துறை அதிகாரிகளின் வசம் ஒப்படைத்த நிலையில் பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது..

Tags

Next Story