மண்டைக்காடு கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி !
காணிக்கை எண்ணும் பணி
மண்டைக்காடு கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்ததையடுத்து கடந்தாண்டை விட அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டில், ஆறு குடங்கள், தற்காலிக உண்டியல் உள்ளிட்ட அனைத்து உண்டியல்களை கடந்த 11ஆம் தேதி பிறகு நேற்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன், உதவியாளர் தங்கம், அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள், சுய உதவிக் குழுப் பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டன. இதில் 12 லட்சத்து 80 ஆயிரத்து 946 ரொக்கமாகவும், 400 மில்லி கிராம் தங்கம், 15 .3 கிராம் வெள்ளி என கிடைக்கப்பெற்றன. இதன் மூலம் திருவிழாக்கால உண்டியல் வருமானம் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரையிலான 36 நாட்களுக்கு 45 லட்சத்து 56 ஆயிரத்து 939 ரொக்கம் வசூலானது. இது கடந்தாண்டை விட அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story