வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பஸ் நிலையத்திலிருந்து குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையில் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தை செந்தில்நாதன் (34) என்பவர் அலுவலக உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 11ஆம் தேதி மாலை பணி முடிந்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் 12ஆம் தேதி காலையில் அலுவலகத்திற்கு வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அலுவலகத்தில் உள்ளே இருந்த பீரோவிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது. இது குறித்து செந்தில்நாதன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து சிசிடி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, அதன்படி விசாரணை நடத்தி, திருவட்டார் பகுதியை சேர்ந்த மெல்பிரின் (26) என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் மெல்பிரின் கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.