இராசிபுரம் அருகே பாஜக சின்னம் வரையும் பணி தீவிரம்

இராசிபுரம் அருகே பிஜேபி சின்னம் வரையும் பணி தீவிரம் பல்வேறு இடங்களில் தாமரை சின்னம் வரையப்பட்டது.

வருகின்ற ஏப்ரல் 19.ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு மற்றும் துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதன் ஒரு பகுதியாக சுவரில் சின்னம் வரையும் பணிகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் மாநிலத் துணைத் தலைவரும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் அவர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினர் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும்,

மேலும் சுவரில் தாமரைச் சின்னம் வரையும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாச்சல், ராமநாயக்கன்பட்டி, புதுச்சத்திரம், களங்காணி, புதன் சந்தை , உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் தாமரைச் சின்னங்கள் சுவரில் கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சினர் சார்பாக சிறப்பாக வரையப்பட்டுள்ளது.

Tags

Next Story