பல்பொருள் அங்காடியில் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !

பல்பொருள் அங்காடியில் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !

திருட்டு 

சேலம் அருகே பல்பொருள் அங்காடியில் மேற்கூரையை உடைத்து பணம், ஜவுளியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் அருகே பல்பொருள் அங்காடியில் மேற்கூரையை உடைத்து பணம், ஜவுளியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பல்பொருள் அங்காடியில் திருட்டு சேலம் அருகே பெரியசீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் அரியானூரில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார்.

கண்ணன் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறப்பதற்காக அவர் அங்கு வந்தார். அப்போது கடையின் மேற்கூரை உடைந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடைக்குள் சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான ஜவுளிகள் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி பணம், ஜவுளிகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story