சுவற்றில் துளையிட்டு திருட்டு: போலீசார் விசாரணை
துளையிடப்பட்ட கடை
தென்காசி மாவட்டம் வாய்க்கால் பாலம் அருகே உள்ள பிரதான சாலையில் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சார்ந்த துரைச்சாமியின் மகன்.ராஜா சிங் (50) என்பவர் 20 வருடங்களுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கடையை பூட்டி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறந்து உள்ளார்.
இதில் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் கடையை ஆராய்ந்த போது கடையில் வைத்திருந்த ரூ3 ஆயிரம் திருடு போனது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தென்காசி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் வீதியில் இரவு நேரத்தில் சுவர்களில் துளையிட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றது. மேலும் இதுபோன்று பெட்டிக்கடைகளில் குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. கடந்த மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறான சிறு சிறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.