கோவிலில் திருட்டு - போலீசார் விசாரணை
ஊட்டி அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊட்டி அடுத்த வேலி வியூ மெயின் ரோடு பகுதியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 100-க்கும் மேற்பட்டோர் வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மேற்கூரையில் உள்ள தகரத்தை வெட்டி கோவிலுக்குள் இறங்கிய நபர் திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் கோவிலில் பெரிய அளவு பணம் மற்றும் நகைகள் எதுவும் இல்லை. எனவே கோவில் உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். மேலும் கோவிலில் இருந்து 25 தட்டுகளையும் எடுத்து சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி மத்திய காவல் துணை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
Next Story