கோயிலில் உண்டியல் காணிக்கைகள் திருட்டு

கோயிலில் உண்டியல் காணிக்கைகள் திருட்டு

திருட்டு

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் அருகே அம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி ராம்ஜி நகா் அருகே எசனபட்டி கிராமத்திலுள்ள செல்லாயி அம்மன் கோயிலை திறக்க திங்கள்கிழமை காலை பூசாரி வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலினுள் சென்று பாா்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. கோயிலுக்குள் இருந்த சிறிய சிலை ஒன்றையும் காணவில்லையாம். இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story