பண்பொழி திருமலைக்கோயிலில் தெப்ப உற்சவம்

பண்பொழி திருமலைக்கோயிலில் தெப்ப உற்சவம்

கடையநல்லூா் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோயிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடந்தது.

கடையநல்லூா் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோயிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடந்தது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோயிலில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் 4-ஆம் சோமவாரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு, நேற்று காலை தெப்ப உற்சவத்திற்காக மலைக்கோயிலில் இருந்து திருமலைக்குமரன், ஐந்துபுளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் ஐந்துபுளி மண்டபத்திலிருந்து நகரீஸ்வரமுடையாா் கோயிலுக்கு குமரன் வீதியுலா சென்றாா். அங்கு சிறப்பு அலங்காரங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இரவில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளும் வைபவமும், பின்னா் தெப்ப உற்சவமும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story