ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு தெப்ப உற்சவம்

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பல்வேறு கட்டளைதாரர்கள் சமூகத்தார்கள் சார்பாக சுற்றுப் பொங்கல் விழா மற்றும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ராசிபுரம் நாயுடுகள் சமூகத்தார் சார்பாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் , கல்வி, தொழில் சிறக்கவும், மற்றும் ஊர் மக்கள் நலமுடன் வாழ வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மற்றும் ஆண்கள் அம்மன் கோவிலில் தெப்பம் கட்டி பெண்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

முன்னதாக காவேரிப்பட்டணம் பம்பை மேளங்கள் முழங்க ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் உற்சவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.

Tags

Next Story