தஞ்சாவூரில் திருமெய்ஞானம் தியாகிகள் தினம்
தஞ்சையில், சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தஞ்சை விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, 1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 இல் நடைபெற்ற, முதல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூரான், மன்னார்குடி ஞானசள நினைவாக வீரவணக்க புகழஞ்சலி உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் பங்கேற்று புகழஞ்சலி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் து.கோவிந்தராஜு, கே.அன்பு, இ.டி.எஸ்.மூர்த்தி, ஏ.ராஜா, விரைவுப் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் பி.வெங்கடேசன், முருகேசன் அரசு போக்குவரத்து சங்க தலைவர் எம்.ஜீவா, மாட்டு வண்டி சங்க தலைவர் என்.கோவிந்தராஜ்,
மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக தியாகிகள் நினைவாக உறுதி மொழியேற்கப்பட்டது