திருத்தணி - காஞ்சி பைபாஸ் பில்லர் அடுக்கும் பணி தீவிரம்

திருத்தணி - காஞ்சி பைபாஸ் பில்லர் அடுக்கும் பணி தீவிரம்

திருத்தணி - காஞ்சி பைபாஸ் பில்லர் அடுக்கும் பணி தீவிரம்

சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன.

இது, 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோல், காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் முதல் பரமேஸ்வர மங்கலம் வரையில், 21 கி.மீ., துாரம் தார் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளன. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கூட்டு சாலையில் இருந்து, அரக்கோணம் புறவழி சாலை தணிகை போளூர் வரையில் அமைய உள்ளது.

இந்த, 17 கி.மீ., துாரம் சாலையில், 41 இடங்களில் தரைப்பால கல்வெட்டுகள் அமைகின்றன. இந்த சாலை அமைந்தால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பள்ளூர், தக்கோலம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, அரக்கோணம் வழியாக, திருத்தணி செல்வோர் புறவழிச் சாலையில் எளிதாக கடந்து செல்ல முடியும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

அரக்கோணம் பைபாஸ் சாலைக்கு, தக்கோலம் பகுதியில் ராட்சத பில்லர்கள் இணைக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணிக்கு பின், ரயில்வே பாலம் இணைப்பு ஏற்படுத்திய பின், புறவழி சாலை போக்குவரத்திற்கு கொண்டு வரப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்."

Tags

Next Story