தேர்தல் நடத்தை விதிகளை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள்

தேர்தல் நடத்தை விதிகளை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள்

திமுக விளம்பர போஸ்டர்

திமுகவின் பேனர்கள், அக்ட்சி கொடிகள் அகற்றவில்லை என புகார்

தமிழகத்தில் லோக்சபா தேர்தலாய் ஒட்டி தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது. இதற்காக ஓட்டுப்பதிவு முடியும் வரை பொது இடங்களில் அரசியல் கட்சி சின்னம், தலைவர்களின் படங்களை விளம்பரப்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக, பேரூர், நகர மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆணைய உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றாமல் உள்ளது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிப்பாடி பயணியர் நிழற்குடையில் முதல்வர் ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி படம் திறந்த நிலையில் உள்ளது. மேலும், பயணியர் நிழற்குடை அமைத்ததற்கான கல்வெட்டு உள்ளிட்டவை திறந்த நிலையில் உள்ளது.

அதேபோல, சின்னம்மாபேட்டையில் மற்ற கட்சியினரின் கம்பம் மற்றும் கொடி அகற்றப்பட்ட நிலையில், தி.மு.க.,வின் கொடிகம்பம் மட்டும் அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது, அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story