கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது

கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது

கைது

பூதப்பாண்டியில் கஞ்சா வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,பூதப்பாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் பெருந்தலைக்காடு என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது ,அதில் 350 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் தடிக்காரன் கோணத்தை சேர்ந்த ஆகாஷ் (23)என்பதும் மற்றொருவர் அந்தரபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story