கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிடும் டிப்பர் லாரிகள்

கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிடும் டிப்பர் லாரிகள்

வாலாஜாபாத் சதுக்கம் அருகே பள்ளி நேரத்தில் டிப்பர் லாரிகள் அடிக்கடி செல்வதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 

வாலாஜாபாத் சதுக்கம் அருகே பள்ளி நேரத்தில் டிப்பர் லாரிகள் அடிக்கடி செல்வதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் - தாம்பரம் செல்லும் சாலையில், வாலாஜாபாத் சதுக்கம் உள்ளது. இந்த சதுக்கத்தின் வழியாக, திருமுக்கூடல், மதுார், பழவேலி உள்ளிட்ட பல்வேறு கல் குவாரிகளில் இருந்து, ஜல்லி, கல் துகள் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் செல்கின்றன. வாலாஜாபாத் சதுக்கம்அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நிதி நாடு மேல்நிலைப்பள்ளி இயங்குகின்றன.

காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி மாணவ - மாணவியருக்கு இடையூறாக, டிப்பர் லாரிகள் இயக்கக்கூடாது என, கலெக்டர் அறிவுரை வழங்கி இருந்தார். கலெக்டரின் உத்தரவினை, டிப்பர் லாரிஓட்டுனர்கள் கண்டுகொள்வதில்லை என, புகார் எழுந்துள்ளது. மேலும், 'பீக் ஹவர்' என அழைக்கப்படும் காலை, மாலை நேரங்களில், போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில்ஈடுபடுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

எனவே, காலை மற்றும்மாலை நேரங்களில்டிப்பர் லாரிகளைபுறவழிச்சாலை வழியாகசெல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags

Next Story