திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் பாலாலயம்

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் பரிகார தளங்களும் அமைந்துள்ளது. ப்ருதிவிஷேத்திரமாகவும், மோஷபுரிகளில் ஒன்றாகியும், ஸ்ரீ காமகோடி பீடஸ்தானமாகவும், 63 நாயன்மார்களில் மூன்று நாயன்மார்கள் முக்தி பெற்ற இன்னும் பல அற்புதங்கள் நிறைந்த காஞ்சி மாநகரில், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிராய் வீட்டிலிருந்து பக்தர்களின் குறைகளை போக்கி வேண்டும் திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது.

இத்தளத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார் முத்தி பெற்ற ஸ்தலமாகும் சேக்கிழார் எழுதிய புராணம் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை சிவஞான முனிவர் எழுதிய காஞ்சிபுரம் ஆகிய நூல்களில் இத்திருக் கோயில் குறிப்பிட்டுள்ளது. பல சித்தர்களால் வழிபட்ட மேற்கண்ட ஆலயத்தின் திருப்பணி செய்ய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி மகா சாமிகள், ஜெயேந்திர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண அனுகிரத்துடன் திருப்பணி செம்மல் குரு சேவா ரத்னா மகாலட்சுமி சுப்ரமணியன் அவர்கள் தலைமையில், திருப்பணி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் லக்கினத்தில் திருப்பணி துவங்க சிறப்பு கலசங்கள் நிறுத்தப்பட்டு சண்முகம் மற்றும் மகேஷ் சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம், மூலவர் விமானம், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிக்குகளுக்கான பாலாலயம் நடைபெற்றது. இப்ப பணிகளை ஆறு மாதத்திற்குள் முடித்து மகா கும்பாபிஷேகம் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

Tags

Next Story