திருவொற்றியூர் கணபதி கோவில் கும்பாபிஷேகம்

திருவொற்றியூர் கணபதி கோவில் கும்பாபிஷேகம்

திருவொற்றியூர் கணபதி கோவில் கும்பாபிஷேகம் 

திருவொற்றியூர் கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர், தேரடி, தெற்கு மாடவீதி சங்கரா காலனியில், கணாத்யாஷிய கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று காலை மஹா கும்பாபிஷேம் நடந்தது. முன்னதாக, சங்கர விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், கணபதி கோவிலுக்கு வந்து, பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வைத்து, ஆசி வழங்கினார். கும்பாபிஷேகத்தையொட்டி, 18ம் தேதி, கணபதி பூஜை, கோபூஜை, முதல் கால பூஜைகள் நடந்தன. பின், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, இரு தினங்கள் கலச பூஜை நடைபெற்றது.

நேற்று காலை, நான்காம் கால பூஜை, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடானது. வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, மூலவர் கணாத்யாஷிய கணபதிக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags

Next Story