ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி முகாம்

ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி முகாம்

ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி முகாம் 

ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, டி.இ.ஓ., லதா தலைமை தாங்கினார். ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவன தலைவர் மகுடமுடி, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், ஜே.ஆர்.சி., ஆலோசகர் உலகநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட கன்வீனர் மாயக்கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சி.இ.ஓ., முருகன், ஜே.ஆர்.சி., கொடியேற்றி முகாமை துவக்கி வைத்தார்.மாநில ஜே.ஆர்.சி., பயிற்சியாளர் சின்னப்பன். மாவட்ட பயிற்றுனர் ஆறுமுகம், மாவட்ட துணைக்குழு பொறுப்பாளர்கள் மாயவன், ஜெரோம், ஆலோசகர் முரளி ஆகியோர் 90 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பொது சுகாதாரம், சேவை, நட்புணர்வு பற்றி பயிற்சி அளித்தனர். மாவட்ட இணை கன்வீனர் துரை நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story