குவைத் தீ விபத்தில் சிக்கிய திருச்சி ஓட்டுநரின் என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு

குவைத் தீ விபத்தில் சிக்கிய திருச்சி ஓட்டுநரின் என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு

தீ விபத்தில் சிக்கிய ஓட்டுநரின் வீடு 

குவைத் தீ விபத்தில் திருச்சியைச் சோ்ந்த ஓட்டுநா் ஒருவரும் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. அவரது நிலை குறித்து அதிகாரப்பூா்வ தகவல் கிடைக்காமல் குடும்பத்தினா் பரிதவிக்கின்றனா்.

திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜு (54). இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். குவைத்திலுள்ள பெட்ரோலியம் மற்றும் ஆயில் நிறுவனமான என்பிடிசி நிறுவனத்தில் டிரெய்லா் வாகன ஓட்டுநராக ராஜு 6 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தாா்.

நிறுவனம் வழங்கிய தங்குமிடத் தொழிலாளா்களது அடுக்குமாடி குடியிருப்பில் இவா் வசித்து வந்த நிலையில், புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த தமிழா்களில் திருச்சியைச் சோ்ந்த ஒருவரும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தனது தந்தையின் நிலையை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அவரது மகன் குணசீலன் என்பவா் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், தமிழக அரசும் குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழா்களின் விவரங்களைக் கேட்டு வருவதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என்பதால் அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்தவுடன் இதர ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தாா்.

Tags

Next Story