டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் படுகாயம் !
விபத்து
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, மலைக்கோவிலூர் அருகே உள்ள லிங்கத்துப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் சுப்பிரமணி வயது 43. இவர் ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில், கோவையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் மொச்சகொட்ட பாளையம் பகுதியில் செயல்படும் LGB கம்பெனி அருகே சென்றபோது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், வெள்ளியணை, வன்னியாம்புதூர் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து வயது 31 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், சுப்பிரமணி ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சுப்பிரமணியையும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாச்சிமுத்துவையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியன் மகன் திருப்பதி வயது 18 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நாச்சிமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.