அரங்கக்குடி பள்ளிவாசல் நிர்வாக குழு தேர்தல்

அரங்கக்குடி பள்ளிவாசல் நிர்வாக குழு தேர்தல்

வஃக்பு தலைவர்

மயிலாடுதுறை அருகே அரங்கக்குடியில் உள்ள முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற 13 பேர் கொண்ட வக்ஃபு நிர்வாகக்குழு தேர்தலில் அர்ஷத் வக்ஃபு நிர்வாக சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்கக்குடி பகுதியில் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது வழக்கம்.இந்த ஜமாத் வக்ஃபிற்கு புதிய நிர்வாக குழு தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாக குழு தேர்தல் நடைபெற்றபோது போட்டியின்றி ஒருமனதாக அப்பகுதியை சேர்ந்த எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டு பள்ளிவாசலை நிர்வாகம் செய்து வந்தனர். இந்நிலையில் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்’வாககுழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தேர்தல் நடத்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வக்ஃபு வாரிய தலைவர் உத்தரவுப்படி 10 ஆண்டுகளுக்குப்பின் அரங்கக்குடி முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வக்ஃபு நிர்வாகக்குழு தேர்தல் நடைபெற்றது. 13 பேர் கொண்ட நிர்வாககுழுவிற்கு 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 498 ஜமாத்தார்கள் வாக்களிக்க தகுதியான நிலையில் 281 வாக்குகள் பதிவானது. இதில் அர்ஷத் தரப்பை சேர்ந்த 13 பேர் வெற்றி பெற்றனர். அர்ஷத் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வக்ஃபு நிர்வாக சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலை முன்னிட்டு செமப்னார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story