58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!

58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!

தொட்டி பாலத்தை வந்தடைந்த வைகை நீர்

58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வைகை நீர் வந்தடைந்தது.

உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கடந்த 23ஆம் தேதி வைகை அணையிலிருந்து 150 கன அடி நீர் திறக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட இந்த நீர் சுமார் 27 கிலோ மீட்டர் பயணித்து உசிலம்பட்டி எல்லையான ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிக நீளமான நீர் செல்லும் தொட்டிப்பாலம் என அழைக்கப்படும் 58 கால்வாய் தொட்டிப்பாலத்திற்கு வந்தடைந்தது.

தொட்டிப்பாலத்தை கடந்த இந்த வைகை நீரை விவசாயிகள் பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர், பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வரும் வழியில் உள்ள செடிகள், முட்களை அகற்றியவாறு பணியாட்களும் பணியாற்றி வருகின்றனர்.

கஇந்த நீர் இன்று மாலைக்குள் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கணூர் மதகு பகுதிக்கு வருகை தரும் எனவும், அங்கிருந்து மொண்டிக்குண்டு, திம்மநத்தம் வழியாக உள்ள பல்வேறு கண்மாய்களுக்கும்,உத்தப்பநாயக்கணூர்,வெள்ளைமலைப்பட்டி வழியாக உசிலம்பட்டி கண்மாய்க்கும் பிரித்து வழங்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story