சாத்தூர் வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்

சாத்தூர் ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா 13 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் சாத்தூர் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலின் இந்த ஆண்டுக்கான ஆனி மாத பிரம்மோற்சவ திருவிழா ஜுன் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் சாத்தூர் ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் சாத்தூரில் நடைபெறும் ஆனி மாத தேரோட்டத்தை சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தேரோட்டத்தை காண வந்த திருநங்கைகள் கும்மி அடித்து பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப் படுத்தியதை ஏராளமான பொதுமக்கள் ரசித்தனர். மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு சாத்தூரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story