கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு !

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு !

பாரத் ரயில்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரு மார்க்கத்திலும் வாரத்தில் 4 நாள்கள் தற்காலிமாக இயக்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்காத நிலையில், அண்மையில் நிறுத்தம் வழங்கி, ஜூலை 11 முதல் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதன்படி, நேற்று காலை 11.44 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்த சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசன் தலைமையில் அக் கட்சியினர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையிலான நிர்வாகிகள் உள்ளிட்டோர் ரயில் ஓட்டுநருக்கு மாலை, சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

இதில், பாஜக நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலர் வேல் ராஜா, நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரவிகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story