ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எகிப்து நாட்டை சேர்ந்த கபடி வீரர்கள் பயிற்சி..

கபடி வீரர்கள் பயிற்சி
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டாக கபடி திகழ்ந்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் எகிப்து நாட்டை சேர்ந்த கபடி குழுவினர் பயிற்சி மேற்கொண்டனர்.
உலக அளவில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கு பெறுவதற்காக எகிப்து நாட்டை சேர்ந்த 20 கபடி வீரர்கள் தமிழகத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்களிடம் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாவை கல்லூரி மாணவர்களுக்கும் எகிப்து நாட்டு வீரர்களுக்கும் போட்டி நடைபெற்ற நிலையில் 39-33 என்ற புள்ளி கணக்கில் எகிப்து நாட்டு வீரர்கள் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து தமிழக விளையாட்டு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சுந்தர் கூறுகையில் எகிப்து நாட்டைச் சேர்ந்த கபடி குழுவினர் உலக அளவில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்க உள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கபடி போட்டி திகழ்ந்துவரும் நிலையில் தமிழக மாணவர்களிடையே கபடி பயிற்சி மேற்கொள்வதற்காக எகிப்து நாட்டை சேர்ந்த வீரர்கள் தமிழகம் வந்துள்ளதாகவும்.
தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து 8 முதல் 10 கல்லூரிகளில் எகிப்து நாட்டை சேர்ந்த வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.முதற்கட்டமாக 4 கல்லூரிகளில் பயிற்சி மேற்கொண்டு எகிப்து வீரர்கள் 2 போட்டியில் தோல்வி பெற்று அதன் பிறகு சிறிது விளையாட தொடங்க உள்ளதாகவும் தமிழக வீரர்களின் மூலம் விளையாட்டை கற்று வெற்றி பெறுவதற்கு எளிமையாக உள்ளதாக எகிப்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கூறியதாக தெரிவித்தார்.
இந்த கபடி விளையாட்டு போட்டியில் பாவை கல்லூரி நிறுவனர் ஆடிட்டர் என்.வி. நடராஜன், கல்லூரி முதல்வர் மற்றும் விளையாட்டு துறை ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த விளையாட்டு போட்டியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
