சிப்காட் வருவதை தவிர்க்க வலியுறுத்தி மலைக் கோவில் உச்சியில் தீபமேற்றி வழிபாடு
தீபமேற்றி வழிபாடு
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், ஆகிய சுற்றுப்புறப் பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்காக பரளி வருவாய்த்துறையினர் மூலம் நில ஆய்வுப் பணி செய்யப்பட்டது. அதன் பின்பு அப்பகுதி விவசாயிகள் 28 ஆலோசனை கூட்டங்கள் 23 வது கட்ட போராட்டமாக கஸ்தூரி மலையில் அரங்கநாதர் பெருமாள் கோயிலில் திருக்கோடி (தீபம் ஏற்றுதல்) மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிப்காட் வருவதால் பாதங்களை விளக்கி பேசினார்.
சிப்காட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ராம்குமார், விவசாய முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் மாதவன், மாநில அரசியல் உயர்மட்டக்குழு துணை ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, பழனிவேல், சிப்காட் துணை ஒருங்கிணைப்பாளர் சரவணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மோகனூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம், பாஜக பிரபாகரன் மற்றும் பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.