கள்ள மது ஒழிக்க கோரி போலீசில் பா.ம.க. மனு

X
பா.ம.க. சார்பில் போலீசில் புகார்
குமாரபாளையத்தில் கள்ள மது ஒழிக்க கோரி பா.ம.க. சார்பில் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மதுவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கொலை செய்தது போல், குமாரபாளையத்தில் நடக்காதிருக்க, கள்ள மது விற்பனை தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. சார்பில், இன்ஸ்பெக்டர் தவமணியிடம் நகர செயலர் கோவிந்தன் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்தார். மாவட்ட துணை தலைவர் சவுந்திரராஜன், முன்னாள் மகர செயலர் சோமு, முன்னாள் ஒன்றிய செயலர் ரவிக்குமார், நகர அமைப்பு செயலர் மாதையன், தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கராஜ், கந்தசாமி, முன்னாள் நகர தலைவர் கார்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story
