சுகாதார விழிப்புணர்வு பேரணி - நகர மன்ற தலைவர் துவக்கி வைத்தார்
விழிப்புணர்வு பேரணி
குமாரபாளையம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் இடங்கள் பஸ் நிலையம், பூங்காக்கள் மற்றும் காவிரி கரையோரம் ஆகிய பகுதிகளில் தூய்மை பணி செய்தல், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், கல்லூரி மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து சுகாதார விழிப்புணர்வு செய்தல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடையே சுகாதாரத்தின் அவசியத்தின் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி குமாரபாளையம்
நகர மன்ற தலைவர் த. விஜய்கண்ணன் கலந்து கொண்டு சுகாதார விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து நகராட்சி பின்புறம் உள்ள காவிரி கரையில் நகர மன்ற தலைவர் த.விஜய்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர். சரவணன் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உதவி காவல் ஆய்வாளர் சந்தியா, நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், இனியாராஜ், நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாரணை இயக்க ஆசிரியர் அந்தோணிசாமி, துப்புரவு ஆய்வாளர்கள் ஜான் ராஜா, சந்தானகிருஷ்ணன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கல்லூரி மாணவர்கள், சுய உதவி குழுக்கள், சாரண இயக்க மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள். சுகாதாரத்துறை நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.