மதிமுக தெற்கு ஒன்றிய நகர பேரூர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம்

மதிமுக தெற்கு ஒன்றிய நகர பேரூர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம்
X

கையெழுத்து இயக்கம்

தமிழ்நாட்டிற்கும் தமிழக அரசுக்கும் எதிராக தொடர்ந்து செயல்படும் தமிழக ஆளுநர் ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்த இயக்கமானது 23.7.2023 தொடங்கி 30.7.2023 வரை நடைபெறவுள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் கீழ் காலனி என்ற பகுதி அருகே, தெற்கு ஒன்றிய நகர பேரூர் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்விற்கு மதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் K.S.K சங்கர் தலைமை தாங்கினார்.மயிலானந்தம் வரவேற்புரையாற்றினார். K. சிவன், MC.சிவகுமரன், தேவராஜ்,M.L.F , c.மூர்த்தி,MLF, சரவணன் MLF செல்வராஜ், விஜி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் A.இளங்கோவன், பள்ளிபாளையம் தெற்கு) சம்பத் , முருகேசன் ஆகியோர் நிகழ்வை துவக்கி வைத்தனர். மதிமுக மேற்கு மாவட்டசெயலாளர் K.K கணேசன் சிறப்புரையாற்றினார். மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் , N.S.ரங்கசாமி கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் கார்த்திக்ராஜா ஆலாம்பாளையம் பேரூர் தி மு க செயலாளர். P.T.D.சதிஸ்,ஆலாம்பாலயம் பேரூர் உறுப்பினர், இளைஞர் காங்கிரஸ், தர்மன்.சிபிஎம், கணேசன் ம.தி.மு.க மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் M. தங்கவேல், பள்ளிபாளையம் டெல்லி ரமேஷ், ஒன்றிய தலைவர் S.V. வேணு, கோபால். 1-வது வார்டு செயலாளர் V..கார்த்தி, ஆலாம்பாளையம் 6-வது வார்டு செயலாளர் R. ஜீவானந்தம், சரவணன், மாதவன், சேகர், குமார், செல்வம், மணி. உள்ளிட்ட ஏராளமானோர் இந்த கையெழுத்து இயக்க நிகழ்வில் பங்கேற்றனர் . மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டது.

Next Story