சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120 ஆக அதிகரிப்பு
போரூர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினசரி 8 முதல் 10 வாகனங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினசரி ஒன்று முதல் 2 வாகனங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
இதன் காரணமாகவே சின்ன வெங்காயம் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
/>
/>