டிச.3, 4ம் தேதிகளில் மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் நினைவாக 6 மாநிலங்கள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி: அமைச்சர் சேகர்பாபு தகவல்
டிச.3, 4ம் தேதிகளில் மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் நினைவாக 6 மாநிலங்கள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் முன்னணி கால்பந்து குழுக்களும், சென்னையை சேர்ந்த 6 கால்பந்து குழுக்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த குழுக்கள் உட்பட 18 கால்பந்தாட்ட குழுக்கள் பங்கேற்கின்றன. போட்டிகளில் கலந்து கொள்ளும் 300 வீராங்கனைகளுக்கும் போட்டிகளில் பயன்படுத்தும் வகையிலான இளைஞர் அணி லோகோ மற்றும் நினைவில் வாழும் விளையாட்டு வீராங்கனை பிரியா அவர்களின் உருவம் பதித்த ஜெர்ஸி ஆடைகள் ழங்கப்படுகின்றன.போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில கால்பந்தாட்ட வீரருமான டி.வி.வேலு மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
/>
/>