இராசிபுரம் கட்டனாச்சம்பட்டியில் கபடி போட்டி

4 year(s) ago 3027

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் 55 கிலோ எடை பிரிவு கபடி போட்டி நடைபெற்றது. இதில் 80 அணிகள் கலந்து கொண்டன. இந்த கபடி போட்டியில் முதல் பரிசு ரூ.10,001, கட்டனாச்சம்பட்டி இடி மின்னல் ஏ கபடி அணியினரும், 2 ஆம் பரிசு ரூ.8,001 ஐ தொப்பம்பட்டி முருகன் நினைவு கபடி அணியினரும், 3 ஆம் பரிசு ரூ.5,001-ஐ எடப்பாடி 7 பிரிட்ஜ் கபடி அணியினரும், நான்காம் பரிசு ரூ. 4,001 ஐ குட்லாடம்பட்டி மூர்த்தி பிரதர்ஸ் கபடி அணியினரும் பெற்றனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை பரிசுக்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கட்டனாச்சம்பட்டி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1085