வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு
2021-2022ம் கல்வியாண்டில் மதிப்பெண் அடிப்படையிலான கல்விச் செயல்பாடுகளில் சாதனைப் படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதில் சீனியர் செகன்டரி பள்ளியில் ஐஐடி பயிற்சியில் தேசிய அளவில் சாதனைப் படைத்த பிரதிக்க்ஷன் ஐஐடி மும்பையிலும், நீட் பயிற்சியில் பூந்தேவன் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் பு. ஜோஷிகா கரூர் மருத்துவக் கல்லூரியிலும் பயில்கின்றனர். மெட்ரிக் பள்ளியில் சாதனைப் படைத்த ரீமா, ரஞ்சிதா, லத்திஷா ஆகியோர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், நிஜந்தா தஞ்சாவூர் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் கார்த்திகேயன், சுபஸ்ரீ ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயின்று பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவர்களை கல்வி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் ராஜன், தலைவர் ராஜா, செயலாளர், ஆசிரியைகள் பாராட்டினர்.
/>
/>