பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
பரமத்திவேலூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை தடுக்கவும், வெள்ள அபாய காலங்களில் காவிரி ஆற்றில் சிக்கியவர்களை காப்பாற்றவும், ஜேடர்பாளையம் காவிரியாற்றின் தடுப்பணை பகுதியில் அடிக்கடி ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கவும் பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் தீயணைப்பு துறை உயர் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கவும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
/>
/>