மல்லசமுத்திரத்தில்உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா

4 year(s) ago 3013

மல்லசமுத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் வழங்கப்பட்டது. தி.மு.க மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட வெங்கடேசபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் 127 மாணவர்களுக்கு கணித உபகரண பெட்டிகள், எழுதுபொருட்கள், வண்ண பென்சில்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் லோகநாதன், ஆசைத்தம்பி பி.டி.ஏ தலைவர் செங்கோட்டுவேல் (எ) மன்னார், வார்டு உறுப்பினர் மானா செல்வம், கட்சி நிர்வாகி ஜாகிர் உசேன், ஆசிரியர்கள் அன்சார் பேகம், கார்த்திகை ஜோதி, இந்திராணி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084