மாதேஸ்வரன் கோவில் பகுதியில் திமுக கொடியேற்று விழா மதுரா செந்தில் கொடியேற்றினார்

4 year(s) ago 3013

தமிழகம் முழுவதும் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட பள்ளிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான மாதேஸ்வரன் கோவில் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கொடியேற்றி துவக்கி வைத்தார். இதில் பள்ளிபாளையம் ஒன்றிய திமுக செயலாளர் வெப்படை செல்வராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்விற்கு பள்ளிபாளையம் அக்ஹாரம் 11வது வார்டு உறுப்பினரும் ஊராட்சி செயலாளருமான S.குமார் (எ) செந்தில்குமார் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயகோபி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வெங்கடாஜலம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084