ராசிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி ராசிபுரம் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் அனுசரித்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர அதிமுக கழகத்தின் சார்பாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான M.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிர்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தி, ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்தனர்.
/>
/>