சக ஊழியரை கத்தியால் குத்திய நபர் கைது

4 year(s) ago 3015

குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதியில் வசிப்பவர்கள் அழகன், 58,கபீர், 48, பெம்மன்கவுடா, 40. டைலர்கள். குமாரபாளையம் ஸ்ரீ வாரி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால், நிறுவனம் சார்பில் இங்கு தங்கி வருகிறார்கள். நவ. 3 இரவு, பெம்மன்கவுடா அதிகம் குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் காலை அறைக்கு வந்து கதவை தட்ட, பெம்மன்கவுடா, இவர்களை தகாத வார்த்தையால் மீண்டும் திட்டியவாறு கதவை திறந்துள்ளார். அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பது கண்டு, இப்படி செய்யலாமா? என்று இருவர் கேட்க, அழகனை கன்னத்தில் அறைந்தும், இடது அல்லையில் காய்கறி அறுக்கும் கத்தியால் குத்தினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் பெம்மன்கவுடாவை கைது செய்தனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084