சொக்கப்பனை எரித்து கார்த்திகை தீப வழிபாடு
குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை யொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலைய வளாகத்தில் சொக்கப்பனைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கற்பூர தீபமேற்றி எரிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடி தீப சொரூபமான சுவாமியை வணங்கினர். கோவில் கோபுரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதே போல் காசி விஸ்வேஸ்வரர் கோயில், கோட்டைமேடு கைலாசநாதர் கோயில், கள்ளிபாளையம் சிவன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோயில், சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
/>
/>