விஜய்யின் வாரிசு படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்
வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யானையை பூஜைக்கு பயன்படுத்த மட்டுமே அழைத்து வந்ததாக படக்குழு தற்போது கூறியது. இதுதொடர்பாக உரிய ஆவனங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/>
/>