செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..!
75வது சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் செங்கோட்டைக்கு பிரதமர் மோடி பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ வந்தார்.
செங்கோட்டை வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். முப்படைகள் சார்பில் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. முப்படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
/>
/>