மருத்துவ நிதிக்கு ராஜேஷ்குமார் எம்.பி பரிந்துரை - 9 பேருக்கு 17.50 லட்சம்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ராஜேஸ்குமார் எம்.பி.. முயற்சியால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் மருத்துவ சிகிச்சைக்கு 17.50 லட்சம் நிதியுதவி கிடைத்துள்ளது. இந்த நிதி உதவியை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜேஸ்குமார் எம்.பி.. பெற்று கொடுத்துள்ளார். சேந்தமங்கலம் அருகே சாலையூர் பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரன், பரமத்தியை அடுத்த வடுகப்பாளையத்தைச் சேர்ந்த ராதா, சோழசி ராமணியைச் சேர்ந்த விஜயலட்சுமி, வள்ளிபு ரத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வி, மலைவேப்பன் குட்டையைச் சேர்ந்த சங்கர், கொசவம்பட்டியைச் சேர்ந்த சங்கர், நரவலூரைச் சேர்ந்த சின்னுசாமி, சேலம் மாவட் டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன், நாமக்கல்லைச் சேர்ந்த சுகுமாரி ஆகியோர் பெற்றுள்ளனர்.
/>
/>