மல்லிகை அறுவடை தீவிரம்

4 year(s) ago 3032

ஆடி மாதம் நிறைவு பெறும் நிலையில், ஆங்காங்கே பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நாமக்கல், திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் மல்லிகை கிலோ ₹700 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி வட்டார பகுதியில் மல்லிகை அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. பறிக்கும் பூக்களை மொத்தமாக மூட்டை கட்டி கிலோ கணக்கில் விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  RELATED NEWS