கொல்லிமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட ஆணை
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2022 மற்றும் 3.8.2022 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவு பிறபித்துள்ளார்.
/>
/>